search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி எய்ம்ஸ் டாக்டர்"

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் நிதிஷ்நாயக், கில்ஞானி இன்று ஆஜரானார்கள். #Arumugasamycommission #jayalalithaadeath #AIIMS
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இதில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், கார் டிரைவர்கள், அரசு ஆலோசகர், அரசு செயலாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள், அரசு டாக்டர்கள் என 75-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

    இவர்கள் அளித்த வாக்கு மூலங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்ட டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேருக்கு விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. வருகிற 23, 24-ந் தேதிகளில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



    இதை ஏற்று எய்ம்ஸ் டாக்டர்கள் நிதிஷ்நாயக், கில்ஞானி இன்று காலை சென்னை வந்தனர். எழிலகத்தில் உள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜரானார்கள்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவர்கள் விளக்கமாக விவரித்தனர். இவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. #Arumugasamycommission #jayalalithaadeath #AIIMS
    ×